மாளிகாவத்தையில் தீ விபத்து..!

கொழும்பு,மாளிகாவத்தை பகுதியில் உள்ள ஜயந்த வீரசேகர மாவத்தையில் உள்ள விழா மண்டபம் ஒன்றில் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் இன்று முற்பகல் (17.06) இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவு தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து சம்பவத்தில் உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும், சொத்து சேதம் மாத்திரமே ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply