ஐரோப்பா கிண்ண காற்பந்தாட்ட தொடரில் நேற்று போலாந்து, நெதர்லாந்து அணிகள் மோதின.
ஜேர்மனி, ஹம்பேர்க்கில் இல் நடைபெற்றது. போட்டி ஆரம்பித்தது முதல் இரு அணிகளும் ஆதிக்கம் செலுத்த தொடங்கின. 16ஆவது நிமிடத்தில் போலாந்து அணிக்காக புக்சா அடித்த கோல் மூலம் முன்னிலை பெற்றது. நெதர்லாந்து அணிக்காக முதலாவது கோலை கக்போ 29ஆவது நிமிடத்தில் பெற்றுக்கொடுத்தார். போட்டி நிறைவடைவதற்கு சில நிமிடங்கள் முன் நெதர்லாந்து அணிக்காக வெகோர்ஸ்ட் இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.