மன்னாரனரின் அபிவிருத்தியால் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பு-ஜனாதிபதி

மன்னார் மாவட்டம் இன்று புணரமைக்கப்படுகிறது. இம் மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு பாரிய பங்களிப்பை வழங்க முடியும். இம்மாவட்டத்தில் சுற்றுலாத் துறை, மீன்பிடி தொழில் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (16/06) நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.

மடு தேவாலயத்திற்கு வரும் பக்தர்களின் வசதிக்காக தற்போது உள்ள மடு வீதியை உடனடியாக செப்பனிடுமாறு இராணுவத்தினருக்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி,
மடு தேவாலயத்தில் நடைபெறவுள்ள வருடாந்த திருவிழாவிற்கு முன்னதாக இந்த சுத்திகரிப்பு பணிகளை முடிக்குமாறு பணிப்புரை விடுத்தார்.

மேலும், மாவட்டத்தில் சுகாதாரம், கல்வி, நீர்ப்பாசனம் உள்ளிட்ட சகல துறைகளிலும் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் ஜனாதிபதியிடம் நேரடியாக முன்வைக்கப்பட்டதுடன், இவற்றில் பல பிரச்சனைகளுக்கு தீர்வுகளை வழங்குவதற்கு ஜனாதிபதி  துரித நடவடிக்கைகளை முன்னெடுத்தார்.

மன்னார் மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் கூட்டப்பட்ட இந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பிரதேசத்தின் அரசியல் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்.

Social Share

Leave a Reply