சாதனையுடன் தொடரை நிறைவு செய்த நியூசிலாந்து

டி20 உலகக் கிண்ணத் தொடரை நியூசிலாந்து அணி லோகி பர்குசனின் அபார பந்துவீச்சினல் வெற்றியுடன் நிறைவு செய்துள்ளது. மேற்கிந்திய தீவுகள், டிரினிடாட் நேற்று(17.06) நடைபெற்ற இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் பாபுவ நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாபுவ நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 78 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. நியூசிலாந்து அணி சார்பில் பந்துவீச்சில் லோகி பர்குசன் 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 4 ஓவர்கள் பந்துவீசிய இவர் எந்த ஒரு ஓட்டங்களையும் வழங்காமை சுட்டிக்காட்டுத்தக்கது. 

79 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றிலக்கை கடந்தது. நியூசிலாந்து அணி சார்பில் டேவன் கொன்வே 35 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். 

இதன்படி, இந்த போட்டியில் நியூசிலாந்து அணி அணி 7 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக நியூசிலாந்து அணியின் லோகி பர்குசனின் தெரிவு செய்யப்பட்டார். டி20 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் 4 போட்டிகளில், இரண்டு போட்டிகளில் மாத்திரம் வெற்றியீட்டியுள்ள நியூசிலாந்து அணி ‘C’ குழாமின் தரவரிசையில் 4 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தில் நிறைவு செய்துள்ளது. 

இதேவேளை, நியூசிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் டிரென்ட் போல்ட் டி20 உலக கிண்ணத்துடன் நியூசிலாந்து அணிக்காக டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply