வவுனியாவுக்கான 81 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் இன்று மாலை (05.09.2021) வவுனியாவை வந்தடைந்துள்ளன. அதனடிப்படையில் வரும் 7ம் திகதி செய்வாய்க்கிழமை காலை முதல் வவுனியாவில் கொரோனா தடுப்பூசிகள் ஏற்றப்பபடவுள்ளன. கிராம சேவகர் பிரிவுகளின் அடிப்படையில், கடந்த முறை போன்றே இம்முறையும் தடுப்பூசிகள் ஏற்றப்படவுள்ளதாக வவுனியா பிராந்தியா சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆசிரியர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான தடுப்பூசிகள் 10ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் மூன்று தினங்கள் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் வழங்கபபடவுள்ளன . வவுனியா வடக்கு பிரதேச செயலகம், செட்டிகுளம் பிரதேச செயலகம், வவுனியா தெற்கு பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கான தடுப்பூசிகளை, அந்தந்த சுகாதர வைத்திய அதிகாரி பணிமனையினை தொடர்புகொண்டு ஊசிகள் வழங்கப்படும் நிலையங்களின் விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
கொவிட் தொற்றை தடுக்கும் முகமாக இம்முறை ஒரு நிலையத்தில் ஆகக் கூடுதலாக ஒரு நாளைக்கு 500 பேருக்கான தடுப்பூசிகள் மட்டுமே வழங்கப்படவுள்ளன. காலை 9 மணிமுதல், பகல் 2 மணி வரை மட்டுமே தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. ஆகவே முடிந்தளவு நேரக்கிரகத்திற்கு வருகை தந்து ஊசிகளை எற்றிக்கொள்ளுமாறு சுகாதார திணைக்களம் அறிவித்துளளது. ஆகவே வவுனியா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சம்மந்தப்பட்ட கிராம சேவையாளர்களது அனுமதி கடிதத்துடனும், தங்களுக்கான வரிசை இலக்கத்துடனும்(டோக்கன்) தங்களுக்குரிய நிலையத்தில் சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும். வேறு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தங்களது திணைக்கள அதிகாரிகளது அனுமதி கடிதத்துடன் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியில் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள முடியும்.
ஏனைய திணைகளங்களுக்கு வவுனியான பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி மகேந்திரன் அவர்களின் பணிப்புரைக்கு அமைவாக வவுனியாவில் பிரத்தியோகமாக அமைக்கப்படவுள்ள விசேட நிலயத்தில் தடுப்பூசிகள் வழங்கப்படும். எந்த தினத்தில் வழங்கப்படும் என்பது பற்றி விரைவில் அறிவிக்கப்படும் என வவுனியா பிராந்திய சுகாதார திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊசிகள் எங்கே வழங்கப்படுகின்றன என்ற முழுமை விபரம் கீழுள்ளது.
கீழுள்ள அட்டவணையின் விளக்கம் –
வவுனியா நகரபகுதிகளில் மட்டுமே கிராம சேவகர் பிரிவு மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கு மாற்றங்கள் கீழுள்ள அட்டவணையில் மாற்றப்பட்டுள்ளன. மற்றைய சகல பகுதிகளிலும் 06 தினங்களும் அதே நிலையங்களில், அதே கிராமசேவகர் பிரிவுகளில் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.
முதலாம் நாள் முதல், ஆறு தினங்களுக்கான விபரங்கள்
| தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
| முஸ்லிம் மகா வித்தியாலயம் | பட்டாணிச்சிபுளியங்குளம் |
| கூமாங்குளம் சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் | கூமாங்குளம் |
| தமிழ் மத்திய மகா வித்தியாலயம் | தோணிக்கல் |
| நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் | நெளுக்குளம் |
| பூவரசங்குளம் வைத்திய சாலை | பூவரசங்குளம் பம்பைமடு செக்கடிப்பிலவு வேலங்குளம் சாலம்பைக்குளம் பாவற்குளம் படிவம் 04 பாவற்குளம் படிவம் 05 & 06 குருக்கள் புதுக்குளம் |
| பாவற்குளம் வைத்தியசாலை | ராசேந்திரங்குளம் சூடுவெந்தபிலவு பாவற்குளம் படிவம் 02 |
| சிதம்பரபுரம் வைத்தியசாலை | ஆசிகுளம் சமலங்குளம் |
| ஓமந்தை வைத்தியசாலை | நொச்சிகுளம் கள்ளிகுளம் சேமமடு பன்றிகெய்தகுளம் ஆறுமுகத்தான்புதுக்குளம் ஓமந்தை மகிழங்குளம் இளமருதங்குளம் |
| நவ்வி வைத்தியசாலை | மருதமடு பாலமோட்டை |
| செட்டிகுளம் வைத்தியசாலை | செட்டிகுளம் முகத்தான் குளம் கிறிஸ்தவகுளம் கங்கன்குளம் பாவற்குளம் படிவம் 09 முதலியார் குளம் ஆண்டியா புளியங்குளம் கந்தசாமிநகர் பெரியாலபுளியங்குளம் |
| கணேசபுரம் வைத்தியசாலை | பெரியதம்பனை பெரியகட்டு கன்னட்டி பிரமணாலன்குளம் |
| நேரியகுளம் வைத்தியசாலை | நேரியகுளம் சின்னசிப்பிக்குளம் மரதமடுவ |
| மாமடு வைத்தியசாலை | மாமடு அக்போபுர மஹாகச்சகொடிய புதுபுளங்குலமா |
| புளியங்குளம் வைத்தியசாலை | புளியங்குளம் வடக்கு புளியங்குளம் தெற்கு |
| நெடுங்கேணி வைத்தியசாலை | நெடுங்கேணி வடக்கு நெடுங்கேணி தெற்கு |
| கனகராயன்குளம் வைத்தியசாலை | கனகராயன்குளம் வடக்கு கனகராயன்குளம் தெற்கு மாங்குளம் சின்னடமபன் |
| நைனாமடு வைத்தியசாலை | நைனாமடு அனந்தர்புளியங்குளம் பரந்தன் |
| குழவிசுட்டான் நிலையம் | குழவிசுட்டான் மாறயிலுப்பை |
| ஒலுமடு அ.த.க பாடசாலை | ஒலுமடு மாமடு |
| கற்குளம் நிலையம் | கற்குளம் மருதோடை பட்டிக்குடியிருப்பு ஊஞ்சல்கட்டி வெடிவைத்தகல்லு |
| போகஸ்வெவ வைத்தியசாலை | பிரப்பன்மடுவ |
| பரக்கும் மஹா வித்தியாலயம் | இரட்டைபெரியகுளம் அவுஷதப்பிட்டிய அலகல்ல கல்குடாமடு |
| உலுக்குளம் வைத்தியசாலை | உலுக்குளம் ஏக்கர் 20,40,60 ஏக்கர் 400 |
| மடுக்கந்த விகாரை | மடுக்கந்த மஹாமயிலங்குலம நெடுங்குளம |
| நடமாடும் சேவை | அவரந்துலாவ ரங்கெத்கம பூமடுவ ரக் 07 மருதமடுவ |
இரண்டாம் நாள் – 08.09.2021
| தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
| முஸ்லிம் மகா வித்தியாலயம் | பட்டாணிச்சிபுளியங்குளம் |
| கூமாங்குளம் சித்தி விநாயகர் மகா வித்தியாலயம் | கூமாங்குளம் |
| தமிழ் மத்திய மகா வித்திரியாலயம் | தோணிக்கல் |
| விபுலானந்தா மகாவித்தியாலயம் | பண்டாரிகுளம் |
மூன்றாம் நாள் – 09.09.2021
| தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
| தாண்டிக்குளம் பிரமண்டு மகா வித்தியாலயம் | தாண்டிக்குளம் |
| கந்தபுரம் வாணி வித்தியாலயம் | கந்தபுரம் |
| தமிழ் மத்திய மகா வித்திரியாலயம் | மூன்றுமுறிப்பு |
| விபுலானந்தா மகாவித்தியாலயம் | பண்டாரிகுளம் |
| சிதம்பரபுரம் வைத்தியசாலை | ஆசிகளும் வன்னிக்கோட்டம் சிதம்பரபுரம் சிதம்பரநகர் கோமரசன்குளம் கல்நாட்டின குளம் கல்வீரன்குளம் தரணிக்குளம் மதுராநகர் |
நான்காம் நாள் – 10.09.2021
| தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
| சைவப்பிரகாச மகளிர் கல்லூரி | கல்விசார் ஊழியர்கள் |
| கோவில்குளம் இந்துக்கல்லூரி | கோவில்குளம் |
| ஸ்ரீராமபுரம் திருஞானசம்பந்தர் மகா வித்தியாலயம் | காத்தார் சின்னகுளம் |
| மகாரம்பைக்குளம் மகாவித்தியாலயம் | மகாரம்பைக்குளம் |
ஐந்தாம் நாள் – 11.09.2021
| தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
| சைவப்பிரகாச மகளிர் கல்லூரி | கல்விசார் ஊழியர்கள் |
| கணேசபுரம் மகாவித்தியாலயம் | மருக்கரம்பளை |
| முருகனூர் அ.த.க பாடசாலை | சமனங்குளம் |
| மறவன்குளம் மகாவித்தியாலயம் | ஈச்சங்குளம் |
ஆறாம் நாள் – 12.09.2021
| தடுப்பூசி வழங்கும் நிலையம் | கிராம சேவகர் பிரிவு |
| சைவப்பிரகாச மகளிர் கல்லூரி | கல்விசார் ஊழியர்கள் |
| கணேசபுரம் மகாவித்தியாலயம் | மருக்கரம்பளை |
| புதுக்குளம் மகாவித்தியாலயம் | புதுக்குளம் சாஸ்திரிகூழாங்குளம் |
| தவசியாகுளம் மகாவித்தியாலயம் | ஈச்சங்குளம் |
