தனியார் வகுப்புகளின் காரணமாக இன்னும் 5 வருடங்களில் பாடசாலை வகுப்பறைகளில் மாணவர்கள் இருக்க மாட்டார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் இன்று(20.06) தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக மாணவர்களுடன் ஒப்பிடும் போது ஆசிரியர்கள் மிகுதியாக காணப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் தனியார் வகுப்பு கட்டணமாக 800 பில்லியனுக்கும் அதிகமான பணத்தை செலவிடுகிறார்கள் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் வெளிக்கொணர்ந்தார்.