மன்னாரில் சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  ‘பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்வு. 

மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் நேற்று (19.06) சர்வதேச யோகா தின நிகழ்வு இடம் பெற்றது.

குறித்த நிகழ்வில்,இலங்கைக்கான இந்திய துணை தூதுவர் சாய் முரளி பிரதம விருந்தினராக கலந்து கொண்டதோடு, யாழ்  இந்திய துணைத் தூதரக அதிகாரி  நாகராஜன், நானாட்டான் டிலாசால் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் மனோ, நானாட்டான் பிரதேச செயலாளர் திருமதி கனகாம்பிகை சிவசம்பு  ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இந் நகழ்வில் பாடசாலையின் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.

அதன்பின்னர், இந்திய துணை தூதுவர் சாய் முரளி மன்னார், நானாட்டான், சிவராஜா, இந்த பாடசாலைக்கு, கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply