பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் நிறைவேற்றம்

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலம் இன்று (20.06) நாடாளுமன்றத்தில் மூன்றாவது முறையாக வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போது கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதாக பிரதி சபாநாயகர் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

பெண்கள் வலுவூட்டல் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் போது கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் தொடர்பான வாக்கெடுப்பு இன்று வியாழக்கிழமை (20.06) நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் இந்த திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் கொண்டுவரப்பட்ட திருத்தங்களுக்கு ஆதரவாக 05 வாக்குகளும் எதிராக 14 வாக்குகளும் கிடைத்தன.

அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்கவினால் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் 09 மேலதிக வாக்குகளால் நிராகரிக்கப்பட்டதாக பிரதி சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.

வாக்கெடுப்பின் போது மூவர் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.

Social Share

Leave a Reply