பேருவளை மீன்பிடி துறைமுகத்திலிருந்து பல நாள் மீன்பிடி கப்பலில் பயணித்த
மீனவர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அந்த படகில் 06 மீனவர்கள் பயணித்த நிலையில் அவர்களிடையே நடுக்கடலில் மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது ஏனைய மீனவர்களும் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவரின் சடலம் பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதாக
தெரிவிக்கப்படுகின்றது.