மன்னாரில் சோதனைச் சாவடி அகற்றப்பட்டது

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி இன்று காலை (21.06) அகற்றப்பட்டன.

இந்த சோதனை சாவடியினால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக மன்னார் மாவட்ட பொது அமைப்புக்கள்,சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு தொடர்புடைய அரச அதிகாரிகளுக்கு
சோதனை சாவடியை அகற்றுவதற்கான கோரிக்கையை கடிதங்களாகவும் மகஜர்களாகவும் வழங்கியிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற விசேட ஒருங்கிணைப்பு
குழு கூட்டத்தில் மன்னார் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் குறித்த சோதனை சாவடியை அகற்றித்
தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்தார்.

அதற்கமைய ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய குறித்த சோதனைச் சாவடியின் வீதி தடைகள் அகற்றப்பட்டுள்ளதுடன்
சோதனை நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் அந்த பகுதியில் இராணுவம் தொடர்ச்சியாக நிறுத்தப்பட்டுள்ளதுடன்
இராணுவ கட்டுமாணங்கள் எவையும் அகற்றப்படவில்லையென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply