தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளும் அவற்றின் முக்கிய ஆலோசகர்களும் பொருளாதாரத்தை நிர்வகிப்பது தொடர்பில்
யதார்த்தத்திற்கு மாறான கருத்துக்களை வெளியிடுவது கவலையளிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட சீர்திருத்தங்களை மாற்றுவது நாட்டிற்கு பேரழிவை ஏற்படுத்தும் என அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இரண்டு வருடங்களுக்கு முன்னர் பெரும் பாதிப்பை சந்தித்திருந்த இலங்கையின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதில் சர்வதேச
நாணயநிதியம் மற்றும் சர்வதேச பங்குதாரர்களின் முக்கிய பங்கையும் நினைவு கூர்ந்தார்.
குறுகிய கால ஆதாயங்களைக் கூட வழங்காத தவறான வாக்குறுதிகளை வழங்குவதைத்
தவிர்க்குமாறு அனைத்து எதிர்க்கட்சிகளையும் அவர்களின் ஆலோசகர்களிடம் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
காலத்தின் தேவை நாட்டின் ஸ்திரத்தன்மையே தவிர அரசியல் விளையாட்டுகள் அல்ல என சுட்டிக்காட்ட அவர்
பொறுப்பான உரையாடலில் ஈடுபடுமாறும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதிவிட்டுள்ளார்.