பிரித்தானியா இளவரசி ஆன் வைத்தியசாலையில் அனுமதி..! 

பிரித்தானியா இளவரசி ஆனுக்கு ஏற்பட்ட சிறு காயங்கள் மற்றும் அதிர்ச்சியினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

பிரித்தானியா, குளோசெஸ்டர்ஷையரில் (Gloucestershire) உள்ள தனது தோட்டத்தில் இருந்த போதே இளவரசி ஆன் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார். 

தற்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள 73 வயதான இளவரசி ஆன் விரைவில் குணமடைவார் எனவும் பக்கிங்ஹாம் அரண்மனை நம்பிக்கை வெளியிட்டுள்ளது. 

இளவரசிக்கு காயம் ஏற்பட்டமைக்கான காரணம் உறுதிப்படுத்தப்படாத நிலையில், குதிரையினால் காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

குதிரையோட்டப் போட்டிகளில் ஆர்வமுடைய இளவரசி ஆன், 1976ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளிலும் பங்கேற்றிருந்தார். பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து முதல் முறையாக ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றவர் எனும் பெருமையும் இளவரசி ஆனை சாரும். 

Social Share

Leave a Reply