முதல் டெஸ்டை வென்றது இலங்கை அணி

மேற்கிந்திய தீவுகள் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.

இலங்கை அணி மே.தீவுகள் அணியை 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.

முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஆணி சார்பில் திமுத் கருணாரத்ன 147 அதிகபடியான ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து ஆடிய மே.தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 230 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் ஆடிய இலங்கை அணி 4 விக்கெட் இழப்புக்கு 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், மே.தீவுகள் அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

முதல் டெஸ்டை வென்றது இலங்கை அணி
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version