தேர்தலுக்கான தயார்ப்படுத்தல்களை ஆரம்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரச அச்சக திணைக்களத்திற்கு அறிவித்துள்ளது.
அரச அச்சக திணைக்களத்தின் தலைவர் கங்கானி லியனகே சிங்கள ஊடகமொன்றுக்கு இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கும் பட்சத்தில், தேர்தலுக்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருப்பதாக கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் செப்டெம்பர் 17ம் திகதிக்கும் ஒக்டோபர் 16ம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் அறிவித்திருந்தது.
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனு கோரல், உரிய காலப்பகுதிக்குள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் அறிவித்துள்ளார்.