கச்சத்தீவு விவகாரம்: இந்தியாவுடன் புதிய உடன்படிக்கை? 

கச்சதீவு பிரச்சினை மற்றும் பாக்கு நீரிணை கடற்பரப்பில்  இலங்கை மற்றும் இந்தியா இடையிலான எல்லை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்தியாவுடன் எவ்வித புதிய உடன்படிக்கையும் ஏற்படுத்திக்கொள்ள படவில்லையென இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.

இதற்கான கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லையென வெளிவிவகார அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தியுள்ளார். 

பாக்கு நீரிணை கடற்பரப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை தொடர்பான விவகாரங்கள் மற்றும் கச்சதீவு பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் விரிவான உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளதாக ‘த இந்து’ நேற்று(28.06) செய்தி வெளியிட்டிருந்தது.

ஏற்படுத்திக்கொள்ள பட்ட இணக்கப்பாடுகள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை என இந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.  

இருப்பினும், இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply