இன்று(01.07) நள்ளிரவு முதல் பஸ் கட்டணம் 5.07 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் இன்று(01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை உறுதிப்படுத்தினார்.
இதற்கமைய புதிய குறைந்தபட்ச பஸ் கட்டணம் 28 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தனியார் பஸ் சங்கங்களுடன் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கமைய ஜூலை மாதம் 1ம் திகதி பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.