திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் CERI நிறுவனமும் இணைந்து, மாற்று பராமரிப்பு பணிக்குழு மற்றும் சிறுவர்களை பாதுகாப்பாக வளர்ப்பதற்கு ஆதரவாக சமூக சேவை பணிக்குழுவை நிறுவுதல் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று(04.07) மாவட்ட செயலக உப ஒன்றுகூடல் மண்டபத்தில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன் தலைமையில் நடைபெற்றது.
CERI நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் வி.தர்ஷனினால் இந்த கலந்துரையாடல் பற்றிய அறிமுகம், நோக்கம் என்பன வழங்கப்பட்டது.
குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகள், குழந்தைகளை வலுப்படுத்துவதற்கான தேவைகள், தரவு அடிப்படையிலான மேம்பாடு, முன்னோக்கி செல்லும் வழி பற்றிய திறந்த விவாதம் போன்ற பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளர் ஆர். ரிஸ்வாணி, துறை சார்ந்த அதிகாரிகள், துறைசார் சார்ந்த உத்தியோகத்தர்கள், CERI நிறுவனத்தின் அதிகாரிகள் உட்பட உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.