முன்னாள் போராளி ஒருவர் பலி

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள  அடம்பன்   பகுதியில் வசித்து வந்த முன்னாள் போராளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 அடம்பன்  வீதியில் உள்ள தனது வீட்டிற்கு முன் நின்று நேற்றிரவு தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த போது
தன்னை வாகனத்தால் மோதிவிட்டுச் சென்றதாக சத்தமிட்டுள்ளார்.

இதன்பின்னர் அடம்பன் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சடலம் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் பிரேத பரிசோதனையின் பின்னரே மரணத்திற்கான காரணம் தெரிய வரும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் போராளியான இவர் மாற்றுத் திறனாளியான பல் துறை சார் ஆளுமை மிக்கவர் என‌ கூறப்படுகிறது.

ரோகினி நிஷாந்தன்
மன்னார் செய்தியாளர்

Social Share

Leave a Reply