லங்கா ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று(06.07) இரண்டாவது போட்டியாக ஜப்னா கிங்ஸ், தம்புள்ளை சிக்சேர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி நடைபெற்று ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தம்புள்ளை சிக்சேர்ஸ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.
கொழும்பு அணி இரண்டவது வெற்றியை பெற்ற நிலையில் யாழ் அணி இரண்டாமணியாக இந்தப் போட்டியில் களமிறங்குகிறது. தம்புள்ளை அணி வெற்றிகளின்றி இறுதி இடத்தில் காணப்படுகிறது. யாழ் அணி வெற்றி பெற்றால் முதலிடத்தை தனதாக்கும். தம்புள்ளை அணி வெற்றி பெற்றால் ஓட்ட நிகர சராசரி வேக அடிப்படையில் அவர்களது இடம் தீர்மானிக்கப்படும்.
இரு அணிகளுக்குமிடையில் கண்டியில் நடைபெற்ற போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருந்தது.
அணி விபரம்
ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, விஜயகாந்த் வியாஸ்காந்த், ரிலி ரொசோவ், பேபியன் அலன், ஹஸ்மதுல்லா ஓமர்சாய், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, அலெக்ஸ் ரோஸ், ப்ரமோட் மதுஷான்
தம்புள்ள சிக்சேர்ஸ் – டில்ஷான் நிமேஷ், நுவான் துஷார, முஸ்டபைஸூர் ரஹ்மான்,அகில தனஞ்செய, தனுஷ்க குணதிலக, நுவனிது பெர்னாண்டோ, குஷல் ஜனித் பெரேரா, தௌஹித் ரிதோய், மொஹமட் நபி, மார்க் சப்மன், சமிந்து விக்ரம்சிங்கே