ரயில் நிலைய அதிபர்களின் வேலைநிறுத்தத்திற்கு அரசாங்கம் பதிலடி 

நாளை கடமைக்கு சமூகமளிக்காத அனைத்து ரயில் நிலைய அதிபர்களும் பதவியை விட்டு வெளியேறியவர்களாக கருதப்படுவார்கள் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 29ம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பில் ரயில் சேவைகளை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே வெளியிட்ட கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று(10.07) வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதாக அறிவித்திருந்த நிலையில்,  ரயில்வே திணைக்களத்தினால் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply