இந்திய அணியின் பயிற்சிவிப்பாளரானார் கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சிவிப்பாளராக, இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷா அறிவித்துள்ளார். 

42வது வயதான கவுதம் கம்பீர் எதிர்வரும் 27ம் திகதி ஆரம்பமாகவுள்ள 3 சர்வதேச ஒரு நாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் கொண்ட இலங்கை சுற்றுப் பயணத்திலிருந்து இந்திய அணியின் பொறுப்பை ஏற்கவுள்ளார்.  

டி20 சம்பியனான இந்திய அணியின் பயிற்சிவிப்பாளராக செயற்பட்ட இந்திய அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரர் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் கடந்த ஜூன் மாதம் நிறைவடைந்த நிலையில், தற்போது கவுதம் கம்பீர் பயிற்சிவிப்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 

2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்  ராகுல் டிராவிட் பயிற்சிவிப்பாளராக செயற்பட்ட காலப்பகுதியில் இந்திய அணி டி20 உலகக் கிண்ணத்தை கைப்பற்றியிருந்ததுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 50 ஓவர் உலகக் கிண்ணத் தொடர்களில் இறுதிப்போட்டி வரை சென்றிருந்தது. 

கவுதம் கம்பீர் இதற்கு முன்னர் கிரிக்கெட் அணிகளின் பயிற்சிவிப்பாளராக செயற்படாத போதும், இம்முறை ஐபிஎல் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உட்பட பல ஐபிஎல் அணிகளில் ஆலோசகராக பணியாற்றியுள்ளார். 

Social Share

Leave a Reply