நட்புறவை பயன்படுத்தி உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்த ரஷ்யாவிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டுமென அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
இது போருக்கான காலம் இல்லை என அமெரிக்க இந்துஸ்தானி செய்தி தொடர்பாளர் எடுத்துரைத்தார்.
மேலும் கருத்துரைத்த அவர்,
“இந்தியா உட்பட அனைத்து நட்பு நாடுகளும் உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்டு வரும் போரை நிறுத்த அந்நாட்டுக்கு அழுத்தம் கொடுக்க அமெரிக்கா வலுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
ரஷ்யா உக்ரைனில் இருந்து வெளியேற வேண்டும். பிரதமர் மோடி ஏற்கனவே தெரிவித்ததை போல், இது போருக்கான காலக்கட்டம் இல்லை.”
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே மிகவும் விசேஷமான நட்புறவு உள்ளது. இந்த நட்புறவை பயன்படுத்தி ரஷ்யாவிடம் போரை நிறுத்த இந்தியா வலியுறுத்த வேண்டும். உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொள்ளும் தாக்குதல் ஐநா விதிகளை மீறும் செயல்,” என அவர் மேலும் தெரிவித்தார்.