LPL – கொழும்பு, யாழ் மோதல் ஆரம்பம்.

லங்கா பிரீமியர் லீக் தொடரில் இன்று (10.07) ஜப்னா கிங்ஸ் மற்றும் கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் அணிகளுக்கிடையிலான போட்டி ஆரம்பமாகியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற யாழ் அணி களத்தடுப்பை தெரிவு செய்துள்ளது.

கொழும்பு மற்றும் யாழ் அணிகள் இந்த தொடரில் முதற் தடவையாக மோதுகின்றன. கொழும்பு அணி 4 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்று 4 புள்ளிகளோடு மூன்றாமிடத்திலும் யாழ் அணி 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று முதலாமிடத்திலு காணப்படுகின்றன. இந்த போட்டியில் கொழும்பு அணி வெற்றி பெற்றால் ஓட்ட நிகர சராசரி வேகத்தின் படி அவர்களின் இடம் தீர்மானிக்கப்படும். யாழ் அணி வெற்றி பெற்றால் 8 புள்ளிகளைப் பெற்றுக்கொண்டு முதலாமிடத்திலேயே காணப்படும்.

யாழ் அணி ஒரு மாற்றத்தோடு விளையாடுகிறது. வனுஜ சஹானிற்கு பதிலாக வியாஸ்காந்த் விளையாட்டுகிறார்.

அணி விபரம்

ஜப்னா கிங்ஸ் – குஷல் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அசலங்க, ரிலி ரொசோவ், ஹஸ்மதுல்லா ஓமர்சாய், அசித்த பெர்னாண்டோ, பத்தும் நிஸ்ஸங்க, பேபியன் , ப்ரமோட் மதுஷான், ரப்ரைஸ் ஷம்ஸி

கொழும்பு ஸ்ட்ரைக்கர்ஸ் – சாமிக்க கருணாரட்ன, திசர பெரேரா, சதீர சமரவிக்ரம, ஷதாப் கான், க்ளன் பிலிப்ஸ், டுனித் வெல்லாலஹே, ரஹ்மானுள்ளா குர்பாஸ், பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரன, அஞ்சலோ பெரேரா, டஸ்கின் அஹமட்

Social Share

Leave a Reply