யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பகுதியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 13 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது, மீனவர்களிடமிருந்து மூன்று விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன
கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 13 போரையும் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.