கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்றதன் பின்னர், 3 மாதங்கள் நிறைவடைந்த 60 வயதுக்கு மேற்பட்ட சகலருக்கும் பூஸ்டர் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி தெரிவித்தார் .
குறித்த நடவடிக்கையை நடமாடும் சேவைமூலம் வழங்குவது குறித்தும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கினார்.
இன்று (26/11) இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டத்தின்போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கினார்.
அதற்கமைய வைத்தியசாலைகளுக்கு கிளினிக் செல்லும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், குறித்த சிகிச்சை நிலையத்திலேயே பூஸ்டர் தடுப்பூசியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.