தேர்தலை ஒத்திவைப்பது தமது கட்சியின் கொள்கை அல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கம்பஹா, மரதகஹமுல்ல பகுதியில் நேற்று(14.07) நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலை ஒத்திவைக்க எவரேனும் முயற்சிப்பார்களாயின் அதனை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முற்றிலும் எதிர்க்கும் எனவும் நாமல் ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.