ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா, பிரதமராக நாமல்? 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நிறுத்துவதற்கு ராஜபக்‌ஷ குடும்பத்தினர் இணக்கங்கியுள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். 

பிரதமராக நாமல் ராஜபக்‌ஷவை நியமிப்பதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், நேற்று(14.07) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது உதயங்க வீரதுங்க தெரிவித்தள்ளார்.  

ராஜபக்‌ஷ குடும்பத்திற்குள் இதற்கான இறுதி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிரி ஸ்தானத்தில் இருக்கும் ஒருவர் என்பதால், ஒருபோதும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக அவர் தெரிவு செய்யப்பட மாட்டார் எனவும் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார். 

எனவே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தம்மிக்க பெரேரா என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரத்துங்க தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply