இலங்கை கிரிக்கெட் அணி, இந்த வருட இறுதியில் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் வெளியிட்டுள்ள போட்டி அட்டவணைக்கு அமைய, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களை கொண்ட போட்டித் தொடரிலும், இங்கிலாந்து அணி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளிலும் பங்கேற்கவுள்ளன.
இலங்கை எதிர் நியூசிலாந்து டி20 தொடர்
1வது டி20 – 28 டிசம்பர் – டௌரங்கா
2வது டி20 – டிசம்பர் 30 – டௌரங்கா
3வது டி20 – ஜனவரி 2 – நெல்சன்
இலங்கை எதிர் நியூசிலாந்து சர்வதேச ஒரு நாள் தொடர்
1வது ஒருநாள் போட்டி – ஜனவரி 5 – வெலிங்டன்
2வது ஒருநாள் போட்டி- ஜனவரி 8 – ஹாமில்டன்
3வது ஒருநாள் போட்டி – ஜனவரி 11 – ஆக்லான்ட்