மகளிர் ஆசிய கிண்ண தொடரில் பங்கேற்கவுள்ள 15 பேர் கொண்ட இலங்கை குழாம் வெளியிடப்பட்டுள்ளது.
விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் ஒப்புதலுக்கமைய இலங்கை குழாம் பெயரிடப்பட்டுள்ளதாக ஶ்ரீ லங்கா கிரிக்கெட் வெளியிட்டுள்ள அறிக்யைில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறையும் இலங்கை மகளிர் அணிக்கு சமரி அத்தபத்து தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை குழாம்: சமரி அத்தபத்து, விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம, ஹாசினி பெரேரா, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி, சுகந்திகா குமாரி, உதேஷிகா பிரபோதினி, அச்சினி குலசூரிய, இனோஷி பிரியதர்ஷினி, காவ்யா கவிந்தி, சச்னி நிசன்சலா, சஷ்னி கிம்ஹானி, அமா காஞ்சனா
மகளிர் ஆசிய கிண்ண தொடர் தம்புள்ளையில் நாளை(19.07) ஆரம்பமாகவுள்ளது. மகளிர் ஆசிய கிண்ணத்திற்காக இரண்டு குழுக்களில் தலா 4 அணிகள் போட்டியிடவுள்ளன.
குழு A: இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஐக்கிய அரபு இராச்சியம்
குழு B: இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, தாய்லாந்து