ரணிலுக்கு பூரண ஆதரவு – மஹிந்த 

ரணிலுக்கு பூரண ஆதரவு – மஹிந்த எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தமது கட்சியுடன் இணைந்து செயற்படுவதற்கு  தயாராக இருந்தால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, அவருக்கு பூரண ஆதரவளிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வேலைத்திட்டம் தம்மிடம் உள்ளதாகவும், ஊடகங்களுக்கு நேற்று(17.07) கருத்து தெரிவிக்கும் போது மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார். 

வேட்பாளரை முன்வைக்கும் போது, ​​குறித்த நபர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்பதை புரிந்தக்கொள்ள இயலும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

தம்முடைய கட்சி எப்போதும் ஒரு பொது வேட்பாளரையே முன்வைத்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

Social Share

Leave a Reply