மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் 2வது போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸிற்காக 416 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இன்றைய போட்டியின் போது, டெஸ்ட் போட்டியொன்றில் குறைந்த பந்துகளில் 50 ஓட்டங்களை கடந்த அணி எனும் சாதனையை இங்கிலாந்து அணி தன்வசப்படுத்தியது. போட்டி ஆரம்பித்து 4.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 50 ஓட்டங்களை கடந்தது.
இங்கிலாந்து, நாட்டிங்ஹாமில் நேற்று(18.07) ஆரம்பமாகிய இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
போட்டியின் முதலாம் நாளான இன்று, முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 88.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 416 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் ஒலி போப் 121(167) ஓட்டங்களையும், பென் டக்கெட் 71(59) ஓட்டங்களையும், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் 69(104) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் பந்துவீச்சில் அல்சாரி ஜோசப் 3 விக்கெட்டுக்களையும், ஜேய்டென் சீல்ஸ், கெவின், கவேம் ஹாட்ஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் பெற்றுக்கொண்டனர்.
போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(19.07) இலங்கை நேரப்படி மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.