“ரணிலை விரட்டுவோம்” – பதாதைகள்

திருகோணமலையில், “ரணிலை விரட்டுவோம், நாங்கள் தயார்” என்று வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை
மக்கள் போராட்ட இயக்கம் காட்சிப்படுத்தியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை தொடர்ந்தும் பிற்போடுவதற்கான முயற்சியை மக்கள் ஆணையற்ற ரணில் அரசு செய்து வருவதாகவும்
மக்கள் போராட்ட முன்னணி தொடர்ந்தும் குற்றம சுமத்தி வருகின்றது.

எதிர்வரும் ஜனாதிபதி மற்றும நாடாளுமன்ற தேர்தல்களை இலக்காகக் கொண்டு
‘மக்கள் போராட்ட முன்னணி’ என்ற பெயரில் கடந்த மாதம் 19 ஆம் திகதி புதிய கூட்டணி உருவாக்கப்பட்டது.

பல்வேறு உரிமைகளை வலியுறுத்தி அரசியல் போராட்டக்களத்தில் ஈடுபட்டிருந்த தரப்பினர் குறிப்பாக,
கோட்டாபாய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்குவவதற்கான போராட்டக்களத்தில் இறங்கிய தரப்பினர்,
சிவில் அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சிலவும் இந்த கூட்டணியில் இணைந்தன.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளரும் மக்கள்
போராட்டக்கள அமைப்பின் தேசிய நிறைவேற்று குழு உறுப்பினருமான வசந்த முதலிகே, மாற்றத்திற்கான
இளைஞர் அமைப்பின் செயலாளர் லஹிரு வீரசேகர, மக்கள் பேரவைக்கான அமைப்பின் சட்டத்தரணி நுவான் போபகே,
ஊடகவியலாளர்கள் ஆகியோர் இந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர்.

தொழிற்சங்க சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் தரிந்து உடுவரகெதர உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள்,
முன்னிலை சோசலிசக் கட்சி, புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சி, சோசலிச மக்கள் கூட்டமைப்பு போன்றனவும் கூட்டணி
உருவாக்கப்பட்டபோது இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Social Share

Leave a Reply