ஜனாதிபதிக்கு ஜயம்பதி பதில்

அரசியலமைப்பின் 19வது திருத்தச் சட்டத்தை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன பதிலளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செய்யப்பட்ட வேளையில் சொக்‌ஸியின் மறைவின் காரணமாக
அந்த பணிகளை சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவிடம் கையளிக்க வேண்டியிருந்தாக தெரிவித்த ஜனாதிபதி
அவரின் தவறு காரணமாகவே தற்போது சிக்கலான நிலைமை உருவாகியிருப்பதாக கூறினார்.

காலி பெலிகஹ பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய நீதிமன்றக் கட்டிடத் தொகுதியை நேற்று (19.07)
திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தின் உச்ச வரம்பை ஆறிலிருந்து ஐந்து வருடங்களாகக் குறைப்பதில்
ஏற்பட்ட தவறு ஜயம்பதியின் கவனக்குறைவாக இருக்கலாம் எனவும் அவர் கூறியதுடன் இதற்காக,
நாட்டு மக்களிடம் ஜனாதிபதி மன்னிப்பும் கோரினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் அறிக்கையின் பிரகாரம் 19வது அரசியலமைப்பு திருத்த வரைபு
வாக்கெடுப்புக்கு சமர்ப்பிக்கப்படாது என்ற அடிப்படையிலேயே முழு திருத்தச்
செயற்பாடுகளும் இடம்பெற்றதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் முழுப் பழியையும் தன் மீது சுமத்துவது பொருத்தமானது
என்று ஜனாதிபதி விக்கிரமசிங்க கருதுவது கவலையளிப்பதாக அவர் கூறியுள்ளார்.

Social Share

Leave a Reply