டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 31,017 டெங்கு நோயாளர்கள்
அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் அதிகளவானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி மேல் மாகாணத்தில் 12,153 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 12 பேர் டெங்கு நோயினால்
உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பொதுமக்கள் தங்களது வீட்டுச் சுற்றுப்புறங்களைச் சுத்தம்
செய்வதில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Social Share

Leave a Reply