பாணுக்கு கட்டுப்பாட்டு விலை? 

பாணுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

பாண் வெவ்வேறு விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்நிலையில், பாணின் விலையை குறைக்க பேக்கரி உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இல்லையென்றால், பாணுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.  

Social Share

Leave a Reply