ஜனாதிபதி தேர்தல் திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வாரம் அறிவிக்கவுள்ள நிலையில், தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21 அல்லது 28ம் திகதி நடைபெறுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும், பின்னர் 28 முதல் 42 நாட்களுக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை நடைபெறும் என்பதால், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ம் திகதி அல்லது 28ம் திகதி நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.