பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர்நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, பாதாள குழுக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு தொடர்பில் மாத்திரம் எதிர்க்கட்சியினர் உரையாற்றுவதாகவும் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
யுக்கதிய சுற்றிவளைப்பு ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து எதிர்க்கட்சியினர் எதிரப்பினை வெளியிட்டதாக சுட்டிக்காட்டிய அவர், பாதாள குழுக்கள் எதிர்க்கட்சியினருக்கு பாதுகாப்பு அளிப்பதனால், உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் தொடர்பில் எதிர்க்கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளதாகவும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.