கொழும்பு, கிரேண்ட்பாஸ் வதுல்லவத்த பிரதேசத்தில் இன்று(25.07) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
31 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஒரு பெண் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.