இலங்கை, இந்தியா அணிகளுக்கிடையிலான முதலாவது 20-20 போட்டி கண்டி பல்லேகல சர்வதேசக் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. ஆனால் இந்தியாவின் துடுப்பாட்டம் அதிரடியாக அமைந்து போக இலங்கைக்கு கடினமான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா அணி சார்பாக துடுப்பாட ஆரம்ப வீரர்களாக களமிறங்கிய சுப்மன் கில், ஜஷாஸ்வி ஜய்ஸ்வால் ஆக்ரோஷமாக அடித்தாடி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். பவர் பிளே ஓவர்கள் நிறைவடையும் இறுதிப் பந்தில் டில்ஷான் மதுசங்கவின் பந்துவீச்சில் கில் 34(16) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்தியா அணி 6 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 74 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. அடுத்த ஓவரில் வனிந்து ஹசரங்கவின் முதற் பந்தில் ஜய்ஸ்வால் 40(21) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், ரிஷாப் பான்ட் ஜோடி இணைப்பாட்டத்தை உருவாக்கியது. 8.5 ஓவர்களில் இந்தியா அணி 100 ஓட்டங்களை கடந்தது. அதிரடியாக துடுப்பாடிய சூர்யா 58(26) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 76 ஓட்ட இணைப்பாட்டம் முறியடிக்கப்பட்து. மதீஷ பத்திரன அவரின் விக்கெட்டை கைப்பற்றினார். மதீஷவின் பந்துவீச்சில் ஹர்டிக் பாண்ட்யா 09(10) ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
ரயான் பராக் 07(06) ஓட்டங்களோடு மதீஷவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ரிஷாப் பான்ட் துடுப்பாட்டத்தில் ஆரம்பத்தில் தடுமாறினார். பின்னர் மீண்டு அதிரடி நிகழ்த்தி ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினார். இதியில் மதிஷவின் பந்துவீச்சில் 49(33) ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். ரிங்கு சிங் 01(02) ஓட்டங்களை பெற்ற வேளையில் அசித்த பெர்னாண்டோவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அக்ஷர் பட்டேல் 10 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றார்.
இந்தியா அணி 20 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 213 ஓட்டங்களை பெற்றது.
இலங்கை அணியின் பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 4 ஓவர்களில் 28 ஓட்டங்களை 01 விக்கெட்டை கைப்பற்றினார். டில்ஷான் மதுசங்க 3 ஓவர்களில் 45 ஓட்டங்களை வழங்கி 01 விக்கெட்டை கைப்பற்றினார். மதீஷ பத்திரன 4 ஓவர்களில் 40 ஓட்டங்களை வழங்கி 04 விக்கெட்களை கைப்பற்றினார். இது இரண்டாவது நான்கு விக்கெட் பெறுதியாகும். மஹீஸ் தீக்ஷண 4 ஓவர்களில் 44 ஓட்டங்களை வழங்கினார். அசித்த பெர்னாண்டோ 4 ஓவர்களில் 47 ஓட்டங்களை வழங்கி ஒரு விக்கெட்டை கைப்பற்றினார். LPL தொடரில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்களை கைப்ற்றிய தஸூன் சாணக்க இந்த போட்டியில் பந்துவீசவில்லை.
இன்று இலங்கை அணியின் களத்தடுப்பு சரியாக அமையவில்லை. பிடிகள் தவறவிடப்பட்டமை, நான்கு ஓட்டங்களை தவறவிட்டமை என்பன இலங்கை அணிக்கு பாதிப்பாக அமைந்தது.
அணி விபரம்
இந்தியா
சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், ஹார்டிக் பாண்ட்யா, சிவம் டுபே, அக்சர் படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், கலீல் அஹமட், மொஹமட் சிராஜ், ரிங்கு சிங், ரியான் பராக், சஞ்சு சாம்சன், வொஷிங்டன் சுந்தர்,
இலங்கை
பத்தும் நிஸ்ஸங்க, குசல் மென்டிஸ், குஷல் ஜனித் பெரேரா, அவிஷ்க பெர்னாண்டோ, சரித் அஸலங்க தஸூன் சானக்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுசங்க, டுனித் வெல்லாலகே, டினேஷ் சந்திமால், , சமிந்து விக்கிரமசிங்க, , கமிந்து மென்டிஸ்,
போட்டி முன்னோட்டம்.
போட்டி முன்னோட்ட வீடியோ தொகுப்பு