பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச தரப்பு சாட்சியாளரான பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று (29/11) கொழும்பு விசேட மேல் நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.

முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் சாட்சியாளராகவே பொலிஸ்மா அதிபர் சந்தன விக்ரமரத்ன இன்று முன்னிலையாகவுள்ளார்.

அதற்கமைய இவ்வழக்கு விசாரணையானது, நீதிபதிகள் மூவரடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளபடவுள்ளது.

பொலிஸ்மா அதிபருக்கு அழைப்பாணை

Social Share

Leave a Reply