வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயுவின் தரம் குறித்த பெற்றோலிய கூட்டுதாபனத்தின் ஆய்வு அறிக்கை இன்று (29/11) வெளியிடப்படவுள்ளது.
மிக சமீப காலமாக சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடிக்கும் சம்பவங்கள் நாட்டின் ஏழு மாவட்டங்களில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளமை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.
எரிவாயு கசிவு காரணமாக இவ்வாறு சிலிண்டர்கள் வெடிப்பதாக கூறப்படும் நிலையில், எரிவாயுவின் தரம் பற்றி ஆய்வுகளை நடாத்த, நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சு பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் கோரியிருந்தது. அதற்கமைய இன்றைய தினம் ஆய்வறிக்கை வெளியிடப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
வீட்டுப்பாவனைக்காக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர்களில் உள்ளடக்கப்படும் வாயுக்கலவையின் விகிதாசாரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.
