நீர்கொழும்பில் உள்ள உணவகம் ஒன்றின் பிரதான சமையல்காரராக பணிபுரிந்து வந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் உணவகத்தின் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ள நிலையில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள குறித்த உணவகத்தின் 2ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு உணவக நிர்வாகம் கடந்த சனிக்கிழமை (27/11) இரவு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.
விருந்தின் முடிவில், குறித்த இளைஞர் உணவக கட்டடத்தின் நான்காவது மாடியில் உள்ள தனது அறைக்கு சென்று கொண்டிருக்கும் பொழுது, படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் உயிரிழந்ததாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
