யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் வாகன விபத்து

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் மூன்று வாகனங்கள் அடுத்தடுத்து மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

சாவகச்சேரியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பஸ், ஹயஸ் வாகனம், டிப்பர் என்பன முறையே
சென்றுள்ளன.

இதன்போது, ஹயஸ் வாகன சாரதி பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்டபோது விபத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் ஹயஸ் வாகனம் பலத்த சேதமடைந்ததுடன் , பஸ்ஸின் பின்பகுதி, டிப்பரின் முன்பகுதி என்பன சேதமடைந்துள்ளன.

மேலும், விபத்தின் போது ஒருவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version