கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த 30 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய மண்சரிவால் இதுவரை 300 இற்கும் மேற்பட்டோர்
உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலச்சரிவில் கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன.
தற்போது வரை தேடுதல் மற்றும் மீட்புப்பணி துரிதமாக நடைபெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும் தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
“தற்போதுவரை 215 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அவற்றில் 87 பெண்கள், 98 ஆண்கள், 30 குழந்தைகளின் சடலங்கள் அடங்கும்.
அத்துடன் 81 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்” என கூறியுள்ளார்.