கோதுமை மா தட்டுபாடு – தீர்மானம் என்ன?

கோதுமை மாவுக்கான விலையினை அதிகரிப்பது தொடர்பிலான இறுதி தீர்மானம் இன்று (29/11) எடுக்கப்படவுள்ளது.

சந்தையில் கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு தொடர்ந்து நிலவும் நிலையில், கடந்த நாட்களில் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டிருந்தது. அதற்கமைய பாண் உள்ளிட்ட பேக்கரி உணவு வகைகளின் விலையை அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் தீர்மானம் எடுத்தது.

குறித்த தீர்மானத்திற்கு இணங்க, நேற்று (28/11) நள்ளிரவு முதல் பாணின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது. அதனை தொடர்ந்து ஏனைய சிறிய உணவு வகைகளின் விலையை 5 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கோதுமை மா தட்டுபாடு - தீர்மானம் என்ன?

Social Share

Leave a Reply