சர்வஜன அதிகாரம் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக வர்த்தகர் திலித் ஜயவீர அறிவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று(04.08) மாலை நடைபெற்ற கட்சி மாநாட்டின் போது பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவினால் இதற்கான அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது.
சர்வஜன அதிகாரம் கூட்டணியால் ஏகமனதாக எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய அந்த கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக திலித் ஜயவீர அறிவிக்கப்பட்டுள்ளார்.