ஒலிம்பிக்: 0.005 வினாடிகள் வித்தியாசத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் 

ஒலிம்பிக்: 0.005 வினாடிகள் வித்தியாசத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் 

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஒலிம்பிக் 100 மீட்டர் ஓட்டத்தின் தங்கப் பதக்கத்தை அமெரிக்க தடகள வீரரான நோவா லைல்ஸ்(Noah Lyles) கைப்பற்றினார். 

100 மீட்டர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப கட்ட சுற்றுக்களை குறைந்த நேரத்தில் நிறைவு செய்து, இவ் வருடத்தின் அதிவேக மனிதனான ஜமைக்காவின் கிஷேன் தாம்சன்(Kishane Thompson) ஒலிம்பிக்கிலும் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 0.005 வினாடிகளினால் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார்.  

அரங்கம் நிறைந்த இரசிகர்களுக்கு மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆரம்பமாகிய 100 மீட்டர் ஓட்டத்தின் இறுதிப் போட்டியில் 8 வீரர்கள் பங்கேற்றிருந்தனர். 

நோவா லைல்ஸ் மற்றும் கிஷேன் தாம்சன் இருவரும் ஒரே நேரத்தில் போட்டியை நிறைவு செய்தது போல தென்பட்டாலும், அமெரிக்காவின்  நோவா லைல்ஸ் 0.005 வினாடிகள் முன்னிலையில் ஓட்டத்தை நிறைவு செய்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் 9.79 வினாடிகளில் போட்டியை நிறைவு செய்திருந்தார். 100 மீட்டர் ஓட்டத்தில் அவர் பதிவு செய்த சிறந்த நேரம் இதுவாகும். 

அமெரிக்காவின் முன்னாள் சாம்பியனான பிரெட் கெர்லி(Fred Kerley) 9.81 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். கடந்த முறை ஒலிம்பிக்கில் 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற இத்தாலியின் மார்செல் ஜேக்கப்ஸ்(Marcell Jacobs) ஐந்தாவதாக போட்டியை நிறைவு செய்தார். 

27 வயதான நோவா லைல்ஸ் 200 மீட்டர் மற்றும் அஞ்சலோட்டப் போட்டிகளிலும் தங்கம் வெல்வார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. 

ஒலிம்பிக்: 0.005 வினாடிகள் வித்தியாசத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் 

கடந்த 26ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளின் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா முதலாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அமெரிக்கா 19 தங்கம், 26 வெள்ளி, 26 வெண்கலப் பதக்கங்கள் உள்ளடங்கலாக 71 பதக்கங்களை இதுவரையில் சுவீகரித்துள்ளது. 

சீனா 19 தங்கம், 15 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும், போட்டிகளை நடத்தும் பிரான்ஸ் 12 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது. 

இந்தியா 3 வெண்கலப் பதக்கங்களுடன் தொடர்ந்தும் 57வது இடத்திலுள்ளது.

ஒலிம்பிக்: 0.005 வினாடிகள் வித்தியாசத்தில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் 

Social Share

Leave a Reply