யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில் பிறந்து 45 நாட்களான சிசுவொன்று, தலையில் தாக்கப்பட்டமையின் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சசிரூபன் நிக்ஷன் எனும் சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாய்ப்பால் கொடுக்கப்பட்டதன் பின்பு சிசு மயங்கி விழுந்ததாக தெரிவித்த தாய், சிசுவை அளவெட்டி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் சிசு உயிரிழந்துள்ளது.
தலையில் தாக்கப்பட்டமையின் காரணமாகவே சிசு உயிரிழந்துள்ளமை பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சிசுவின் தாய் தெல்லிப்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.