இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி பலி

பலாங்கொடை – சமனல வாவியில் நீராடச்சென்ற இளைஞரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நண்பர்கள் சிலருடன் நேற்று(04) நீராடச்சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வென்னப்புவயை சேர்ந்த 29 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

சடலம் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சமனலவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply