தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான காலவகாசம் நீடிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் காலவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

தபாலில் ஏற்படக்கூடிய தாமதம் மற்றும் ஆணைக்குழுவிடம் விடுக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இன்று (05.08) நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடையவிருந்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஒகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply